பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா செல்வியை பார்த்து இந்த ஓடரை கண்டிப்பாக நாங்க செய்ய வேணுமா என்று கேட்கிறார். அதைக் கேட்ட செல்வி வேலைக்கு ஆட்கள் இருக்குத் தானே பிறகு ஏன் ஜோசிக்கிற என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா வீட்டில நிறைய பிரச்சனை போய்கிட்டிருக்கு இந்த சூழ்நிலையில ஓடர் எடுத்து பண்ண முடியுமா என்று தெரியல அதுதான் ஜோசிக்கிறேன் என்கிறார்.
இதனை தொடர்ந்து ஆகாஷ் இந்த ஓடரை எடுத்தால் இந்த பிரச்சனையை கொஞ்ச நாளைக்கு மறந்திடுவீங்க என்று சொல்லுறார். பின் செல்வி அந்த ஓடர் பண்ணுறதுக்கு சம்மதிக்கிறார். அதை அடுத்து, வீட்டில எல்லாரும் சிரிச்சு சந்தோசமாக இருக்கிறதை பார்த்த பாக்கியா என்ன நடந்த என்ற குழப்பத்துடன் வீட்டிற்குள்ள போறார். பின் இனியா தன்ர அண்ணனோட சேர்ந்து சமைச்சுக் கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கோபி இனியா சமைக்கிறதை பார்த்து ஷாக் ஆகுறார். பின் கோபி பாக்கியாவை பார்த்து நிறைய நாளுக்கு அப்புறம் இனியா ரொம்ப சந்தோசமாக இருக்கிறாள் என்று சொல்லுறார். மேலும், இனிமேல் இனியாவோட சந்தோசத்தை கெடுக்கிற மாதிரி எந்த ஒரு தப்பையும் செய்யப்போறதில்ல என்கிறார்.
பின் நிதீஷுக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் வந்திருக்கிறதைப் பார்த்த சுதாகர் ரொம்பவே ஷாக் ஆகுறார். இதனை அடுத்து, இதுக்காக தான் நிதீஷை அமைதியாக இருக்க சொன்னேன் என்கிறார் சுதாகர். மறுநாள் காலையில பாக்கியா ஓடர் கொடுத்த ஆளுக்கு போன் எடுத்து உங்கட ஓடரை செய்யுறேன் என்கிறார். பின் சுதாகர் இனியாவோட officeக்குப் போய் நிற்கிறார். அப்ப இனியா எனக்கு கண்டிப்பாக நிதீஷ் கிட்ட இருந்து டிவோர்ஸ் வேணும் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!