• Jan 19 2025

கீர்த்தி சுரேஷிற்கு நடு ரோட்டில் நடந்த அநியாயம்! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள திரையுலகில் குழந்தையாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உருவெடுத்தார்.

தமிழில் அறிமுகமான  இவருக்கு 'ரஜினி முருகன்' படம் தாறுமாறு ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து பைரவா, சாமி, ரெமோ போன்ற படங்களில் நடித்தார்.

அத்துடன், தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்க்கும் விதத்தில் இவர் நடித்த மகாநடி கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இதை தொடர்ந்து பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையும் தரமான  கதைகளையும் தேர்வுசெய்து நடித்து வருகிறார். 


இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து பேசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும்  தெரியவருகையில்,  நடிகை கீர்த்தி சுரேஷ் கல்லூரியில் படிக்கும் சமயத்தில்,  தன்னுடைய தோழியுடன் நடு ரோட்டில் நடந்து சென்றபோது குடிகாரன் ஒருவர் சாய்ந்து, கை வைத்ததாக கூறியுள்ளார். அந்த சமயத்தில் தான் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் நின்று விட்டதாகவும், பின்னர் அவரை அடித்ததாகவும் கூறியுள்ளார்.  

இதை அறிந்த ரசிகர்கள் பலர் கல்லூரி படிக்கும் போது மிகவும் தைரியமாக இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுளீர்கள் என தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement