• Jan 18 2025

ஷுட்டிங் ஸ்பாட்டில் தொல்லை கொடுத்த நடிகர்- விசித்ராவை ஓங்கி அறைந்த ஸ்டன்ட் மாஸ்டர் இவர் தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு சென்ற பிறகு விசித்ராவுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு விசித்ரா சொன்ன கருத்துகளும், தனக்கு எதிராக செயல்படும் ஹவுஸ்மெட்ஸை அவர் டீல் செய்யும் விதமும் ரசிக்ர்களை கவர்ந்துள்ளது.

 இதனால் வார இறுதியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் எபிசோடில் விசித்ராவுக்கு கைத்தட்டல் அதிகரித்து வருகிறது.இது ஒரு புறம் இருக்க கடந்து வந்த பாதை டாஸ்க்கில் 20 வருஷத்துக்கு முன்பாக நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.


 மேலும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்ட நிலையில், அவர் குறித்து ஸ்டன்ட் மாஸ்டரிடம் புகார் தெரிவித்த உடனே அந்த ஸ்டன்ட் மாஸ்டர் தப்பு செய்தவரை விட்டு விட்டு தன்னை ஓங்கி கன்னத்தில் அறைந்ததாக சொன்ன சம்பவம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், அந்த ஸ்டன்ட் மாஸ்டர் யார் என்பதை  விமர்சகர் ஜோ மைக்கேல் ஓபனாகக் கூறியுள்ளார். டோலிவுட் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டராக தற்போது வரை பல படங்களுக்கு பணியாற்றி வரும் ஏ. விஜய் தான் அந்த ஸ்டன்ட் மாஸ்டர் என்றும் அவர் குறித்து விசித்ரா புகார் அளித்தும் அவருக்கு நடிகர்கள் சங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பொழப்ப பாருங்க எனக் கூறியதாக சொல்லி உள்ளார்.


Advertisement

Advertisement