• Oct 13 2026

எழில் அண்ணாவிற்கு வாழ்த்து சொன்ன இனியா... வைரலாகும் அழகிய புகைப்படங்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா, வாணி ராணி, சித்தி 2, உட்பட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தற்போது பாக்கிய லட்சுமி சீரியலைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் கதாநாயகியின் தங்கச்சியாகவும்  நடித்துக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் பாக்கிய லட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வி.ஜே விஷால் பிக் பாஸிற்கு சென்றிருக்கிறார். அந்த சீரியலில் அவருக்கு தங்கச்சியாக நடித்திருந்த நேஹா அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.


அந்தப் பதிவில், ``வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு தீர்க்கம் கொண்டிருந்த நீங்கள் இப்போது எட்டியிருக்கும் உயரங்களுக்கு உங்களது கடின உழைப்பு மட்டுமே காரணம் எனவும் மேலும் சில விடையங்களை கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்தோடு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 






Advertisement

Advertisement