சந்தானம் நடித்த ’இங்க நான் தான் கிங்கு ’என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி மற்றும் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டு நாள் வசூல், ’ஸ்டார்’ படத்தின் முதல் நாள் வசூலில் பாதி கூட இல்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வந்த ஒரு சில படங்கள் ஹிட் ஆனாலும் பெரும்பாலான படங்கள் சுமாரான வசூலையே பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ ’ஏஜென்ட் கண்ணாயிரம்’ ’குலுகுலு ’சபாபதி’ ’டிக்கிலோனா’ ’பாரீஸ் ஜெயராஜ்’ ’பிஸ்கோத்’ ’ஏ1’ ஆகிய படங்கள் மிக சுமாரான வசூலையே பெற்றது என்றும் ’தில்லுக்கு துட்டு 2’ படத்திற்கு பிறகு அவருக்கு சூப்பர் ஹிட் படம் எதுவும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் ’இங்க நான் தான் கிங்கு’ படம் வெளியான நிலையில் இந்த படம் இரண்டு தினங்களில் குறைவாகவே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் மூன்று கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ’ஸ்டார்’ முதல் நாள் வசூலில் பாதி கூட ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் இரண்டு நாள் வசூல் இல்லை என்றும், இரண்டு நாட்களில் இந்த படம் ரூ.1.43 கோடி மட்டுமே வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதும் ப்ளூ சட்டை மாறன் உள்பட ஒரு சிலர் மோசமாக விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!