• May 20 2024

சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் பற்றி வெளியான தகவல்- ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாகன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் ,சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக லோகேஷிற்கு கார் மற்றும் 13 துணை இயக்குநர்களுக்கு பைக் என்பனவற்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ரோலக்ஸ் மணிக்கூடு ஒன்றையும் வழங்கியிருந்தார்.

ஆனால் அந்த வாட்ச் புதுசு இல்லை என்றும் ஏற்கனவே கமல்ஹாசன் பல ஆண்டுகளாக பயன்படுத்தியது என்றும் அதே நேரத்தில் அந்த வாட்ச் மீது அவருக்கு சென்டிமென்ட் அதிகம் இருந்தது என்றும் அதை தனது அன்பு பரிசாக சூர்யாவுக்கு சென்டிமென்ட்டையும் மீறி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement