நடிகர் ரோபோ சங்கரின் மகள் கடந்த 24ஆம் தேதி ரோபோ சங்கர் தத்தெடுத்து வளர்த்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திருமண கொண்டாட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிஷப்ஷன் வரை மிகவும் பிரம்மாண்டமாக, ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருந்தால் ரோபோ சங்கர்.
அதேபோல இந்த இந்திரஜா தனது திருமணத்திற்கு கையில் போட்ட மருதாணி முதல் கல்யாணத்துக்கு வாங்கிய பட்டுப் புடவை, அதற்கு தாலி போட்ட டிசைனில் ஜாக்கெட் என அனைத்தையும் பார்த்து பார்த்து தனக்காக செதுக்கியிருந்தார்.
இதை தொடர்ந்து, தனது ஒவ்வொரு சந்தோஷத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இந்திரஜா, திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் செல்ல திட்டமிட்டதை விஷயத்தையும் விளம்பரப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது இந்திரஜாவும் அவருடைய கணவர் கார்த்திக்கும் தாய் மசாஜ் சென்டருக்கு சென்று மசாஜ் பண்ணியதோடு, அடிக்கிற வெயிலுக்கு குளு குளு என குளியல் ஒன்றையும் போட்டுள்ளனர்.
குறித்த வீடியோவை தனது சேனலில் பதிவிட்டு உள்ளதோடு, கணவருடன் பாடி மசாஜ் செய்தது, குளியல் போட்டது, கிறீன் டீ குடிச்சது என ஒவ்வொன்றையும் பதிவிட்டு பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளார் இந்திரஜா.
இதேவேளை, இந்திரஜா, கார்த்திக் அவர்களுடன் இந்திரஜா அம்மா மற்றும் கார்த்திக் அம்மா இருவரும் அவர்களுடன் என்ஜோய் பண்ணியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!