• Apr 15 2026

ஹனிமூன் விஷயத்தையும் பப்ளிசிட்டி பண்ணிய இந்திரஜா..! அந்த நாட்டுக்கு இப்படியொரு சான்ஸ்..??

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் கடந்த 24ஆம் தேதி ரோபோ சங்கர் தத்தெடுத்து வளர்த்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திருமண கொண்டாட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிஷப்ஷன் வரை மிகவும் பிரம்மாண்டமாக, ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருந்தால் ரோபோ சங்கர்.

அதேபோல இந்த இந்திரஜா தனது திருமணத்திற்கு கையில் போட்ட மருதாணி முதல் கல்யாணத்துக்கு வாங்கிய பட்டுப் புடவை, அதற்கு தாலி போட்ட டிசைனில் ஜாக்கெட் என அனைத்தையும் பார்த்து பார்த்து தனக்காக செதுக்கியிருந்தார்.


இந்த நிலையில், தற்போது இந்திரஜா திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் செல்ல திட்டமிட்டதை வீடியோ ஒன்றில் விளம்பரப்படுத்தியுள்ளார்.


அதாவது, விரைவில் மலேசியாவுக்கு ஹனிமூன் செல்ல திட்டமிட்ட இருவரும், மலேசியாவுக்கு போகலாம் ஆனாலும் பல லட்சம் செலவாகும் என கூறுகின்றனர். ஆனாலும் அவ்வளவு எல்லாம் ஆகாது வெறும் 14,999க்கு 4 நாள் 3 நைட்டு என மலேசியாவை  சுற்றிப் பார்த்து வந்து விடலாமென டூர் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பரம் செய்த வீடியோ தற்போது வைரலாக உள்ளது.

கடந்த வாரம் இந்திரஜா தனது திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை பிரித்துப் பார்க்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், தற்போது அவர்களை அடுத்த கட்ட வீடியோவை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.


Advertisement

Advertisement