• Apr 15 2026

ஒரே நாளில் யூடியூப்பை அதிரவிட்ட 'இந்திரா'! அர்ஜுன் - அதிதி காம்போவிற்கு இவ்வளவு வியூஸா?

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரல் தனித்துவமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது “ஒன்ஸ் மோர்” என்ற புதிய திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் சோனா ஒலிக்கல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ஆரம்பத்திலேயே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இந்நிலையில், இப்படத்தின் “இந்திரா” பாடல் நேற்று ( ஏப்ரல் 3ஆம் தேதி) வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. குறிப்பாக, பாடலின் மெலடி, காட்சியமைப்பு மற்றும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் ஆகியோரின் இணைவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

யூடியூபில் தொடர்ந்து பார்வையாளர்கள் அதிகரித்து வரும் இந்த “இந்திரா” பாடல், தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. இதனால் “ஒன்ஸ் மோர்” படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement