கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படத்தை மிகவும் ஆர்வத்துடன் லைகா நிறுவனம் எதிர்பார்த்த நிலையில் இந்த படம் கவிழ்த்து விட்டது மட்டுமின்றி போட்ட முதலீடு கூட வராது என்று கூறப்படுகிறது.
5 ஆண்டுக்கு மேலாக இந்த படம் கால தாமதம் ஆனது, அதனால் முதலீட்டிற்கு ஏற்பட்ட வட்டி நஷ்டம், இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பில் தடங்கல், கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தம் என பல்வேறு பிரச்சனைகள் இந்த படத்திற்கு வந்தது.
இதனை அடுத்த திடீரென ஷங்கர் ’கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கிய நிலையில் அதன் பிறகு லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தான் ’இந்தியன் 2’ படத்தையே மீண்டும் படப்பிடிப்பு நடக்க வைத்தது.
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ’இந்தியன் 2’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் மோசமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தால் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே லைகா நிறுவனம் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ’இந்தியன் 2’ படம் நன்றாக ஓடினால் அந்த நிறுவனம் தப்பிக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ’இந்தியன் 2’ படமும் கவிழ்த்து விட, லைகா தற்போது நம்பி இருப்பது ரஜினியின் ’வேட்டையன்’ மற்றும் அஜித்தின் ’விடாமுயற்’சி படங்கள் மட்டுமே.
இந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தால் மட்டுமே லைகா நிறுவனம் தப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!