• Sep 27 2023

இந்தாம்மா ஏய், குணசேகரன் கவலைக்கிடமாக இருக்காரு.. உங்களுக்கு இதெல்லாம் தேவையா... நந்தினி, ரேணுகாவை வச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் தற்போது நெஞ்சு வலியால் துடிதுடித்து விழுந்த குணசேகரன் மருத்துவமனையில் உடல், உறுப்புக்கள் சில செயலிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.


இந்நிலையில் இந்த சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரியதர்ஷினியும், நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்தினியும் தற்போது சாமிப்படத்தின் முன்னாள் பரத நாட்டியம் ஆடும் வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "இந்தம்மா ஏய், குணசேகரன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கார் உங்களுக்கு டான்ஸ் கேட்குதா" எனவும், "இருக்கிற பிரச்சினையில் இது வேறயா" எனவும் கேட்டு குணசேகரன் பாணியில் கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement