• Jan 19 2025

களைகட்டும் திருமண கொண்டாட்டங்கள்.. சோபிதா வெளியிட்ட பங்க்‌ஷன் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நாகர்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

சமந்தாவை பிரிந்த கையோடு நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் கொண்டார் நாக சைதன்யா. அடிக்கடி வெளியூர் பார்ட்டிகளில் டேட்டிங் செய்து கொண்ட இவர்கள் ஆரம்பத்தில் நண்பர்களாகவே பழகினார்கள். அதன் பின்பு நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் திருமணத்துக்கு தயாராகி விட்டார்கள்.

இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரகசியமாக காதலித்து வந்துள்ளார்கள். இந்தியாவில் டேட்டிங் செய்தால் விஷயம் லீக் ஆகிவிடும் என்பதால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கே ரொமான்ஸ் செய்து வந்தனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியான போதும் அது பற்றி மனம் திறக்காமல் இருந்தனர்.


இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதில் இரண்டு வீட்டாரும்  கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை நாகர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு அவர்களை வாழ்த்தியும் இருந்தார்.

இந்த நிலையில், ‘Pasupu Danchadam’ என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக கூறியுள்ள சோபிதா, அதில் பாரம்பரிய முறைப்படி பட்டுச்சேலை அணிந்து வெகுவாகக் கொண்டாடியுள்ளார் . தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Advertisement