• Jan 19 2025

மனோஜ்க்கு அடிக்கப்போகும் அதிஷ்டம்.. கோடீஸ்வர குடும்பமாக பக்கா பிளான் போட்ட ரோகிணி?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளையை ரெஸ்டாரன்ட் ஒன்றில் வைத்து மீட் பண்ணுவதற்காக முத்துவும் மீனாவும் செல்லுகின்றார்கள்.

அங்கு மாப்பிள்ளை வந்ததும் அவரிடம் உங்களுக்கு என்ன கண்டிஷன் இருக்கு என்று கேட்க, அவர் சொன்னது எல்லாமே சீதாவுக்கு எதிராக இருக்கிறது. இதனால் முத்துவும் மீனாவும் சீதா சொன்ன ஒரு கண்டிஷன் கூட இவரோட பொருத்தம் ஆகலையே என்று யோசிக்கின்றார்கள். ஆனாலும் அவர் இறுதியில் தான் குடித்த ஜூஸிற்கான பில்லை கொடுத்துவிட்டு போனது முத்துவுக்கு பிடித்திருந்தது. இதனால் இந்த நேர்மை ஒன்று போதும் சீதா நேரில் சந்தித்து கதைக்கட்டும் என்று சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் ரோகினி சிட்டியிடம் பிஏ வை ஏதாவது செய்யுமாறு சொல்ல, அவர் தனக்கு வீடியோ வந்த மறு நிமிசமே  செய்வேன். ஆனா வீடியோ தராமல் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லுகின்றார். இதனால் ரோகிணி முத்துவை பார்ட்டி ஒன்றில் குடிக்க வைத்து அதில் இருந்து போனை எடுப்பதற்கு பிளான் போடுகின்றார் .


அதன் பின்பு மறுபக்கம் மனோஜின் பார்க் நண்பர் மனோஜின் கடைக்கு வந்து சென்னையில் பெரிய பிசினஸ் மேன் ஒருவர் நன்றாக உழைக்கக்கூடிய ஒருவருடன் டீல் வைக்கப் போகின்றார். நான் உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்கின்றேன். அத்துடன் நீ கோடீஸ்வரன் உனது தம்பி ஐம்பது காருக்கு சொந்தக்காரர், மற்ற தம்பி ரெஸ்டாரன்ட் சொந்தமாக வைத்திருக்கிறார் என்று உன்னை பெரிய கோடீஸ்வர குடும்பமா சொல்லி இருக்கேன் என்று சொல்லுகின்றார்.

மனோஜ் முதலில் பொய் சொன்னதைப் பற்றி பயப்பட அதன் பின்பு ரோகினி எடுத்து சொல்லுகின்றார். இதனால் தமது திருமண நாள் அன்று குறித்த கோடீஸ்வரரை கூப்பிட்டு பார்ட்டி வைப்போம். ஆனால் அதற்கு முத்துவிடம் நான் சொல்ற மாதிரி கூப்பிடு என்று ரோகிணி மனோஜ்க்கு ஐடியா கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement