• Nov 06 2024

ரொம்பவும் அசிங்கப்பட்டு வெளியேறிய அர்னவின் பிக் பாஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என்ற வசனத்தோடு பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டு வாரங்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் இரண்டு பேர் எலிமினேட் ஆகிய வெளியே சென்று உள்ளார்கள்.

இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

தயாரிப்பாளர் ரவீந்தர் முதலாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்றிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு காரணம் அவர் பல வருடங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ பண்ணி வருகின்றார். இதனால் அவர் சிறந்த கண்டென்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கு பற்றி நேற்றைய தினம் எலிமினேட்டாகி வெளியே சென்ற அர்னவின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அர்னவுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25000 வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.  அவர் 14 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு 2.8 - 3.5 லட்சம் வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய அர்னவ்-  அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தது பேசு பொருள் ஆனது. அதன்பின் அர்னவின் முதல் மனைவி திவ்யா அன்ஷிதா , அர்னவ் மூன்று பேரும் பேசிய பழைய ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவும் அர்னவ் வெளியேற காரணமாக இருந்தது. 

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்னவ், பெண்கள் நல்லா விளையாடுறாங்க.. ஆனா ஆண்கள் குரூப்பா சேர்ந்து ஜால்ரா அடிக்கிறாங்க. ..டேய் நீங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு எதுக்கு வந்தீங்க என்று பேச, கடுப்பான விஜய் சேதுபதி இது வன்மத்தை காட்டும் இடமில்லை.. இத்தனை நாள் அவங்களோடு இருந்துவிட்டு இப்போது அவர்களை தரக்குறைவா பேசுறது சரி இல்லை என அட்வைஸ் கொடுத்து அனுப்பி இருந்தார். இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்னவ் அவமானத்தோடு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement