• Jan 19 2025

பிரசவ வலியால் துடித்த மனைவியின் வீடியோ... இர்ஃபானுக்கு எதிராக அதிரடி ஆக்சன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் தான் பிரபல யூட்யூபர்  இர்ஃபான். இவர் விதவிதமான சுவையான உணவுகளை தேடி சாப்பிட்டதோடு அவற்றை தனது சேனலில் பதிவிட்டு மிகவும் பிரபலமானார். இவரது சேனலில் மட்டும் கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் காணப்படுகின்றார்கள்

இவர் கடந்த ஆண்டு ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றதோடு இவர்களை பல பிரபலங்களும் அழைத்து திருமணம் விருந்து கொடுத்து இருந்தார்கள். அந்த வீடியோக்களையும் தனது சேனலில் பதிவேற்றி இருந்தார்.

அதன் பின்பு தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை அறிவித்த  இர்ஃபான், தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை டெஸ்ட் எடுத்து பார்ப்பதற்காக துபாய்க்கு சென்றிருந்தார். இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில் அந்த வீடியோவை தனது சேனலில் இருந்து நீக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து நேற்றைய தினம் தான் தனது மகளின் புகைப்படத்தை முதன்முதலாக இணையத்தில் வெளியிட்டிருந்தார். 


இந்த நிலையில், தனது மனைவி ஆசிபா பிரசவ வலியால் அவதிப்பட்டதையும் தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் இருந்த  இர்ஃபான்,  மனைவிக்கும் குழந்தைக்கும் இடையிலான தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற காட்சியையும் வீடியோவில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின் படி தவறு என இர்ஃபானுக்கு எதிராக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இதனை பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் செய்ய வேண்டும் என்றும்  இர்ஃபான், தொப்புள் கொடியை வெட்டுவது தனி நபர் உரிமையை மீறும் செயல் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதோடு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement