• Jan 19 2025

அட நீங்களுமா? தனியாக இருக்கும் கிருஷ்ண வம்சி! ரம்யா கிருஷ்ணனுடன் விவாகரத்தா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தொடர்ந்து நடிகர் நடிகைகளின் விவாகரத்து குறித்த சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு விரைவு விவாகரத்து நடக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேச பட்டு வருகிறது.


ஒரு காலத்தில், சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்யும் சீசனாக இருந்தது. இப்போது விவகாரத்து சீசனாக மாறி விட்டது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கும், கிருஷ்ண வம்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். மேலும் அவர்களுக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது என கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது.


ரம்யா கிருஷ்ணன் சென்னையிலும், கணவர் ஹைதராபாத்திலும் இருக்கிறார். இதை வைத்து தான் இந்த பேச்சு துவங்கியது. ஆனால் இது முழுக்க முழுக்க புரளி தான். யார் பார்த்து விட்ட வேலை என்று தெரியவில்லை. அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சலித்துக்கொண்டுள்ளார் வம்சி.


மேலும், “நானும், ரம்யா கிருஷ்ணனும் பிரியவில்லை. நாங்கள் விவாகரத்து பெறவில்லை. வேலை காரணமாக நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். அவ்வளவு தான். உடனே விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்வதை கேட்கும்போது வேதனை அளிக்கிறது. ரம்யா ஒரு நல்ல மனைவி, நல்ல அம்மா” என்று குறிப்பிட்டுள்ளார்  வம்சி.



Advertisement

Advertisement