• Jan 18 2025

கல்கி படக்குழு வெளியிட்ட போஸ்டரில் யாஸ்கினான உலக நாயகன் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளைய தினம் வெளியாகவிருக்கும் கல்கி கி.பி 2898 திரைப்படமானது பான் இந்திய நடிகர்களால் மெருகேறி இந்தியா தாண்டி உலக அளவில்  ரசிகர்களால் பெரும் கொண்டாட்டமாக கருதப்படுமளவிற்கு படத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kamal Haasan in Kalki 2898 AD: Kamal ...

பெரும் பொருட்செலவில் உருவான இப் படத்திற்கான விளம்பரப்படுத்தல் வேலைகளுக்கும் பெரிதளவான நிதி ஒதுக்கப்பட்டு அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்களினால் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. டிக்கெட் முன்பதிவுகளிலேயே மலைக்க வைக்கும் சாதனையை செய்துள்ளது கல்கி திரைப்படம்.

Kalki 2898 AD, Prabhas asked ...

இந்நிலையில் சற்று முன்னர் கல்கி படக்குழுவின் உத்தியோகபூர்வ வலைதள பக்கத்தில் வெளியான போஸ்டரானது  ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இப் படத்தில் நடிக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் யாஸ்கின் கெட்டப்பில் இருக்கும் படியான படத்தை கொண்ட போஸ்ட்டரை பதிவிட்டிருக்கும் படக்குழு "ஒரே ஒரு உயர்ந்த யாஸ்கின்" எனும் தலைப்பினையும் கொடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement