அட்லி தயாரிப்பில் "தெறி " பட ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கல்யாணம் முடிந்த கையுடன் கணவரை விட்டு வருண் தவானுடன் பேபி ஜான் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்று அவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களினை பகிர்ந்தமையால் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இவரை சில போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுக்க அழைத்து "க்ரித்தி" என்று அழைத்தனர். இதற்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் திடுக்கிடும் வகையில் "க்ரித்தி இல்லை நான் கீர்த்தி சுரேஷ்" என்று கூறி மிகவும் நேர்மையான பதில் கொடுத்தார்.
அதன் பிறகு சில போட்டோகிராபர்கள் கீர்த்தியை "Dosa" (தென்னிந்திய நடிகர்களை வடநாட்டில் சிலர், அப்படியான பெயர்களால் அழைக்கும் வழக்கம்) என அழைத்தனர். இதை கேட்டு கீர்த்தி சுரேஷ் ஷாக் ஆகி"நான் கீர்த்தி தோசா இல்லை நான் கீர்த்தி சுரேஷ்.
ஆமாம், எனக்கு தோசை பிடிக்கும்!" என்று சிரித்தும், நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்தார்.
Listen News!