• Jan 18 2025

நான் கோவா போறன் ஆள விடுங்க நீங்களாச்சி உங்க பிக் பாஸ் ஆச்சி... பிரதீப் ஆண்டனியின் டுவிட் பதிவு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்  போட்டியாளராக பங்கு பற்றி இருந்த பிரதீப் ஆண்டனி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ரீதியிலே ஆண்டவரினால் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


பிரதீப் ஆண்டனிக்கு பலரும் ஆதரவு வழங்கிய நிலையில் அவர் மீண்டும் பிக் பாஸ் வருவார் என எதிர் பார்க்கபட்டது ஆனால் அது நிகழவில்லை. அதன் பிறகு சமூகவலை தளங்களில் பதிவுகளை போட்டு வந்த பிரதீப் தற்போது இன்னுமொரு பதிவை போட்டுள்ளார்.


அதாவது அவர் குறிப்பிட்டு இருந்த விடையமாவது "சரி ஓகே ஜோலியா இருந்துச்சி இப்போ 4-5 ப்ரொடியூசர் என்ன நம்பி கதை கேக்குறாங்க , நான் iffi கோவா 2024 கிளம்புறேன். நாலு போfரின் படம் பாத்துட்டு ,திருடி ,ஒரு நல்ல கதை எழுதி கொண்டு படத்தோட வாரான் ஆள விடுங்க நீங்களாச்சி உங்க பிக் பாஸ் ஆச்சி , போயிட்டு வாரன் நல்லாஇருங்க என்று போட்டு ஒரு காமெடி வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


  

Advertisement

Advertisement