• May 20 2024

மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன்- பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்த இசைஞானி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இசைஞானி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் இளையராஜா.தமிழ்த் திரையுலகின் இசை கடவுளாக பார்க்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்துள்ளதாக பாரத பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கலை இலக்கியம் சமூக சேவை விளையாட்டு சட்டம் போன்ற பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் தற்போது ராஜசபா நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவி கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு இசைஞானி இளையராஜா பிரதமர் மோடிக்கு தனியாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகத்தினர் இடையே கொண்டு சேர்க்க கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன். இந்திய அரசு கொடுத்த இந்த அங்கீகாரம் ஆனது இசை மற்றும் கலை ஒரு ஆர்வமாகவும் தொழிலாகவும் இளைய தலைமுறையினர் தோன்றும். இது இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு புத்துயிர் பெறச் செய்துள்ளது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இளையராஜா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement