• Sep 27 2023

லியோ படத்தில் நடிச்சிருக்கேன்.. என்ன கிரண் இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க.?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், திருமலை, நியூ, வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகை கிரண் விஷாலின் ஆம்பள படத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகியது ரசிகர்களை அப்செட் ஆக்கியது.


சீனியர் நடிகையாக இன்னொரு ரவுண்டு வருவார் கிரண் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் வேறு விதமான போட்டோக்களை போட்டுத் தாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கிரண்.


நடிகை கிரண் டாப் ஹீரோயினாக விக்ரம், அஜித், கமல், விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஒருத்தரை உயிருக்கு உயிராக காதலித்து ஏமாந்த நிலையில், சினிமாவில் இருந்து அப்படியே காணாமல் போய் விட்டார்.


 நடிகை கிரணை பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஏதாவது ஒரு ரூமர் உங்களை பற்றி நீங்களே சொல்லுங்க என்றதும், தமிழ் சினிமாவில் 4 படங்களில் கமிட் ஆகி உள்ளேன் என்று சொல்லி சிரித்த நடிகை கிரண் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் செய்துள்ளேன் என குண்டை தூக்கிப் போட்டுள்ளார். மேலும், நடிகர் விஜய் எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு சூப்பர் என ஃபிளையிங் கிஸ் எல்லாம் விஜய்க்கு கொடுத்து விட்டார் கிரண்.


உண்மையாகவே கிரண் லியோ படத்தில் நடித்துள்ளாரா அல்லது அவர் சொன்னது ரூமரா என்பது அந்த தொகுப்பாளருக்கே தெரியாதபடி குழப்பி விட்டுள்ளார் கிரண். இவர் இவ்வாறு கூறியதும் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement