• Sep 30 2023

மேடையில் லிரிக்ஸ் மறந்த மகள்... கண்ணீர் வடிக்கும் தாய்... உடனே அப்பாஸ் செய்த செயல்... கண் கலங்க வைத்த Video..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும் சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.


இதில் சிறப்பு விருந்தினர்களாக பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். அந்தவகையில் இந்தவாரம் நடிகர் அப்பாஸ் கலந்து கொண்டுள்ளார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அக்ஷாரா என்ற சிறுமி 'என்னை மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி' என்ற பாடலை சூப்பராக பாடுகின்றார். ஆனால் இடையில் அதன் பாடல் வரியை மறந்து விடுகின்றார். 


இதனைப் பார்த்த அவரது தாயார் கண் கலங்கி அழுகின்றார். பின்னர் "அக்ஷராக்கு உடம்பு சரியில்லை, ஸ்கான் பண்ண அந்த ரூமுக்குள்ள போகும் போது புஜ்ஜி பாட்டோட லிரிக்ஸ் தான் படிச்சிற்று இருந்தாங்க.அந்த லிரிக்ஸ் மறந்திடுமா பாட முடியுமா என்ற பயம் இருந்திட்டுத்தான் இருந்திச்சு, இந்தளவிற்குப் பாடினதற்கே கடவுளிற்கு நன்றி சொல்கின்றேன்" எனக் கூறி அழுகின்றார்.


இதனைத் தொடர்ந்து எழும்பிய அப்பாஸ் "எனக்கும் ஒரு பிரச்சினை இருக்கு, மியூசிக் பற்றி எனக்கு அவ்வளவு அறிவு இல்லை, ஒரு விஷயம் அவள் பாடும் போது பார்த்திட்டு இருக்கோம், அதை சொல்லணும்" எனக்கூறி நடுவர்களுக்கு அருகில் வருகின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.  


Advertisement

Advertisement

Advertisement