• Sep 27 2023

காதலியை கழட்டி விடத் துணிந்த கௌதம்... ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு... பரபரப்பான திருப்பங்களுடன் 'Aaha Kalyanam' promo video..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்பங்கள், துயரங்கள் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது. 


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கௌதமிற்குக் கால் பண்ணிய ஐஸ்வர்யா "என் பழைய ப்ரண்ட் அருண் என்று ஒருத்தன் இருக்கான், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வீட்டிற்கு வந்து அப்பா அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருக்கார், இந்தக் கல்யாணத்தை எப்படி நிறுத்திற என்றே தெரியல" என்கிறார்.


அதற்கு கௌதம் "ஒரு பக்கம் வெண்ணிலா விஷயம் ஓகே ஆகிட்டு, இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவிற்கு கல்யாணம் முடிவாகிட்டு, இப்பவே இவளைக் கழட்டி விடுறதுதான் கரெக்ட்" என தனது மனதிற்குள் எண்ணி சந்தோசப்படுகின்றார். 

பின்னர் ஐஸ்வர்யாவிடம் "அந்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோசமாக இரு, நீ சந்தோசமாக இருந்தால் போதும் அந்தத் திருப்தியிலேயே உன் நினைப்புடன் நான் வாழ்ந்திடுவேன்" எனக் கூறிப் போனைக் கட் பண்ணுகின்றார்.


இதனையடுத்து ஐஸ்வர்யா இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திறேன் எனக்கூறி தனக்குத் தானே சவால் விடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement