'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை பிரபல நடிகர் ரவி மோகன் மற்றும் அவருக்கு நெருங்கிய தோழியான கெனிஷா ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த திறப்பு விழாவில் ரவி மோகனும் கெனிஷாவும் வெள்ளை நிற ஆடையில் ஜொலித்தார்கள். இதில் ரவி மோகன் மற்றும் கெனிஷா உணர்ச்சி பூர்வமாக பேசியும் இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கெனிஷா எனக்கு கடவுள் கொடுத்த கிப்ட் என ரொம்ப உருக்கமாகவும் ரவி தெரிவித்து இருந்தார்.
குறித்த நிகழ்ச்சியில் பேசிய கெனிஷா, நான் அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும், சர்ச்சைக்குரிய விஷயங்கள் உங்களுக்கு தெரிந்தாலும், நான் ஒரு பாடகியாக, இசை தயாரிப்பாளராக, ஆன்மீக ஆலோசகராக காணப்படுகின்றேன். எனது பெயர் கெனிஷா பிரான்சிஸ் என்று தன்னை பற்றி அறிமுகம் செய்திருந்தார்.
மேலும் நானும் ரவியும் ஒரே கனவுடன் இணைந்து இருக்கின்றோம். நான் ரவியைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்ல விரும்புகின்றேன். என்னுடைய கைபேசியில் ஏழு திரைக்கதைகள் முழுமையாக இருக்கின்றன.
அதில் இயக்கம் முதல் திரைக்கதை, நடிப்பவர்கள் தேர்வு முதல் உரையாடல்கள் வரை அனைத்துமே ரவி உருவாக்கி வைத்துள்ளார். ரவி மிகவும் திறமையானவர். அதை உலகம் பார்க்க நான் காத்திருக்கின்றேன். அவர் எனக்கு ஒரு சொல்லை கற்றுக் கொடுத்தார். அது பேராசை.. எனக்கும் பேராசை இருக்கு.. ரவி மோகன் போன்ற ஒருவரை எனக்கு தந்ததற்கு வரலட்சுமி அம்மாவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!