• Oct 29 2025

தலைமறைவாகிய நடிகை லட்சுமி மேனன்..! போலீசார் தீவிர விசாரணை.. நடந்தது என்ன.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான விடுதியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் தற்போது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தமிழ் நடிகை லட்சுமி மேனன் தொடர்புடைய தரப்புக்கும், ஒரு ஐடி நிறுவன ஊழியருக்கும் இடையே நடந்த மோதல், பின்னர் கடத்தல் மற்றும் தாக்குதல் புகாராக மாறியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை லட்சுமி மேனன் தற்போது தலைமறைவாக இருப்பதாக எர்ணாகுளம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் திரையுலகத்தில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாக்குதலுக்குப் பிறகு,  ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று லட்சுமி மேனன் தரப்பு தாக்கியதாகவும் புகார்  எழுந்துள்ளது. ஐடி ஊழியர் புகாரில் லட்சுமி மேனனுடன் சேர்ந்து மதுபான விடுதிக்கு வந்திருந்த 3 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாக எர்ணாகுளம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement