• Apr 26 2024

நான் குறைவாகத் தான் சாப்பிடுவேன் என்னுடைய பெயரை வைக்காதீர்கள்- ரசிகரின் ஆசையை நிராகரித்த சோனுசூட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சோனு சூட்.இவர் கடந்த  1999-ஆம்  வெளியான கள்ளழகர்’என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

அதனை தொடர்ந்து திரைப்படம் நெஞ்சினிலே, சந்தித்த வேளை, மஜ்னு, சாகசம், ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி என பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் படங்களில் நடிப்பதில் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகின்றார்.சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.



இந்த நிலையில் தான் ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள கோண்டாப்பூர் அருகே கிறிஸ்மத் ஜெயில் என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகம் இந்தியாவில் மிகப்பெரிய உணவு தட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த தட்டிற்குசோனு சூட்டின் பெயரை அந்த உணவகத்தின் நிர்வாகிகள் வைத்துள்ளனர். அந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அவர் கூறியதாவது

“இந்தியாவில் மிகப்பெரிய தட்டு இப்போது என் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் நான் சைவ உணவு உண்பவர் என்பதினாலும் குறைவான அளவில் மட்டுமே உணவு உட்கொள்ளுவர் என்பதினாலும் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் சாப்பிட கூடிய அந்த தட்டிற்கு என்னுடைய பெயரை வைப்பது அவ்வளவு நன்றாக இருக்காது” என்று பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் பதிவிற்கு பதிலளித்த அந்த உணவகத்தின் நிர்வாகிகள் கூறுகையில் “மிகப்பெரிய தட்டிற்கு உங்கள் பெயரை தவிர எங்களுக்கு வேறு சிறந்த பெயரும் வரவில்லை.இருந்தாலும் உங்களுடைய நேர்மையான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி’ என்று அதில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாகிவில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement