• Apr 26 2024

3 நாட்களில் வாத்தி படம் பெற்ற வசூல் நிலவரம்- வெளியாகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் சம்யுக்தா ஆகியோரது நடிப்பில் தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் வாத்தி.கல்வியை மையமாக கொண்டு வெளியான வாத்தி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக வெளியான படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பை செய்த நிலையில், படத்தின் இசை வெளியீடும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படத்தின் ரிலீசுக்கு முன்னதாக ஐதராபாத்தில் சார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ் இந்தப் படத்தின் மூலம் நேரடியாக தெலுங்குப்படத்தில் அறிமுகமான நிலையில், படம் வெளியாகி இரு தினங்களிலேயே தமிழை காட்டிலும் அதிகமான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.


இந்நிலையில் படம் ரிலீசாகி கடந்த 3 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து 51 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில் படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.


அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி என வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement