• Sep 27 2023

'ஜவான்' படத்தைப் பார்த்திட்டு உயிரோட வருவேனான்னு தெரியல... கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 


அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


இந்நிலையில் ஜவான் திரைப்படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள டுவிட் ரசிகர்கள் மத்தியில் சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.  அதாவது இப்பதிவில் அவர் "சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா?' , 'ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 hrs 50 minutes. இதை முழுசா பாத்துட்டு உயிரோட வீடு வந்த சேர முடியுமான்னு தலையை பிச்சிட்டு இருக்கேன். நீ வேற ஏன்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்கற?" என மீம்ஸ் ஒன்றின் மூலமாக கழுவி ஊற்றியுள்ளார்.


இவ்வாறாக படம் வெளியாகுவதற்கு இன்னும்  ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவானது பலரையும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement