• Sep 21 2023

மாலையும் கழுத்துமாக வந்த வேதா... காவேரிக்கு காத்திருந்த அதிர்ச்சி... இனி நிகழப்போவது என்ன..? 'Modhalum Kaadhalum' Serial..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான்  'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியலின் கதைப் பிரகாரம் கோர்ட்டில் வைத்து வேதா கழுத்தில் விக்ரம் தாலி கட்டுகின்றார். இதன் பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தன்வி விக்ரம் வேதாவோடு இருக்க நீதிமன்ற உத்தரவு வழங்கப்படுகிறது. விக்ரம் , வேதா திருமணம் செய்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றாலும், மறுபுறம் வேதாவின் பிறந்தநாளுக்காக வீட்டில் வேதாவின் அம்மா அப்பா ரெடி பண்ணிட்டு இருக்காங்க.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் "பொறந்தநாள் அதும எங்க அவள காணோம்னு காவேரி கேக்க வந்துருவானு வேதா  அப்பா சொல்லுறார். இன்னொரு பக்கம் விக்ரம் வேதாவை வீட்டுக்கு அழைச்சிட்டு வாறார். உடனே விக்ரமோட  அம்மா '' ஆரத்தி எடுக்கணும் ரெண்டு பெரும் ஒன்னா நில்லுங்க'' என்று சொல்ல வேதா '' நா வரல எப்போ என் அப்பாவும் அம்மாவும் இந்த கல்யாணத்த ஒத்துகிற வரைக்கும் அதுதான் என்னோட வீடு'' அப்டினு கூறி விக்ரம் வீட்டிற்குள் நுழையாது தன் வீட்டிற்கு செல்கிறார். 


இதனையடுத்து வேதா மாலையும், கழுத்துமாக விக்ரமுடன் வீட்டிற்கு போகின்றார். அங்கு வேதா  வந்துட்டான்னு ஹாப்பி பர்த்டே சோங் பாடிட்டு கதவ திறந்த வேதாவோட அப்பாக்கும் அம்மாக்கும் சரியான ஷோக் . இனி விக்கிரம்-வேதா கல்யாணத்த வேதாவின் குடும்பம் ஏத்துப்பாங்களா ? இல்லையா ? என்பது காவேரி எடுக்கபோற முடிவைப் பொறுத்துத்தான் இருக்கு. 


Advertisement

Advertisement

Advertisement