• Jan 18 2025

எனக்கு நல்ல பிரேம் இல்ல.. மென்டலா ரொம்ப டவுன் ஆகிட்டேன்! ரியா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8ல் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ரியா தியாகராஜன். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனதை தொடர்ந்து தற்போது அவர் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக காணப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஆறாவது வாரம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த முறை ஒரு வீட்டை இரண்டாக பிரித்து ஒரு பக்கம் ஆண் போட்டியாளர்களும் இன்னொரு பக்கம் பெண் போட்டியாளர்களும் காணப்படுகின்றார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்த போதும் உள்ளே உள்ள போட்டியாளர்கள் சரியான கண்டென்ட் கொடுக்கவில்லை என புதிதாக ஆறு வைல்ட் கார்ட் என்ட்ரிகளை உள்ளே அனுப்பினார்கள். ஆனாலும் அவர்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

d_i_a

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக எலிமினேட் ஆகி வெளியே சென்ற ரியா தியாகராஜன் தனது முதலாவது வீடியோவை  மிகவும் எமோஷனலாக பேசி வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அவருடைய வீடியோ வைரலாகி வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், இந்த வீடியோ பதிவு பண்ணும் போதே நான் ரொம்பவும் மென்டலா டவுன் ஆகி இருக்கிறேன். இந்த வாய்ப்பு கிடைக்கும் போது எனக்கு பலரும் சொன்ன விஷயம் என்னவென்றால் நீ பிஆர் செட் பண்ணு,  நீ இப்படி வொர்க் பண்ணு, அப்படி வொர்க் பண்ணு என்று நிறைய விஷயம் சொன்னாங்க..

ஆனாலும் எனக்கு பிஆர்  ஒன்றும் தேவையில்லை. நான் உள்ள போய் என்னால என்ன பண்ண முடியுமோ அதை நிச்சயம் பண்ணுவேன். அதை பார்த்து மக்களுக்கு என்ன தோணுதோ அவங்க சின்னதா சப்போர்ட் பண்ணி இருந்தாலும் எனக்கு போதும் என்று நினைத்து தான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றேன் .

அங்க என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்க வேண்டிய இடத்தில் கேள்விகளை கேட்டு நியாயமா தான் நடந்தேன். ஆனாலும் எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. எதற்காக மக்கள் என்னை எலிமினேட் பண்ணினார்கள் என்று.. ஒருவேளை எனக்கு நல்ல பிரேம் இல்ல அதுதான் காரணமா என்றும் தெரியவில்லை என ரியா தியாகராஜன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்  .

Advertisement

Advertisement