• Sep 07 2025

அந்த நேரத்தில் போராடக் கூட தெரியல..! அப்படியென்ன நடந்துச்சு தெரியுமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மதுபாலா. தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார்.

இவர் நடித்த படங்களில் ரோஜா, ஜென்டில்மேன் உட்பட ஒரு சில படங்கள் இன்றளவில் மட்டும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கி இருந்த மதுபாலா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.


இவருடைய நடிப்பில் ஸ்வீட் காரம் காபி என்ற வெப் தொடர் உட்பட ஒரு சில படங்களும் தயாராகி வருகின்றன.


இந்த நிலையில், நடிகை மதுபாலா சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில்,  தென்னிந்திய கலைஞர்கள் ஒரு காலகட்டத்தில் பெரிய கேலிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் இப்போ அப்படி இல்லை. அந்தக் காலத்தில் நாங்க சந்தித்த பிரச்சினைகளால் எனக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. நாங்கள் இந்தியர்கள். ஆனால் ஏன் இப்படி ஒருவருக்கொருவர் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய கேலிகளுக்கு எல்லாம் எங்களால் பதில் அளிக்கக்கூட முடியவில்லை. அந்த நேரத்தில் எப்படி போராட வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை என மதுபாலா தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement