• Apr 28 2024

'உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன்'- இளையராஜாவால் மகிழ்ச்சிக்குள்ளான கமல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படமானது ரிலீஸாகிய நாளிலிருந்து ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று இதுவரையில் கிட்டத்தட்ட 400 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

இப்படம் கடந்த 5 ஆண்டுகளில் எந்த தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தி வருகின்றது. விக்ரம் படத்தின் வெற்றியால் கமல் இயக்குநர் லோகேஷிற்கு கார், அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு பைக், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச், விக்ரம் டீமுக்கு பிரியாணி விருந்து என வழங்கி வருகிறார்.

இப்படத்தின் வெற்றியால் பலரும் கமலைப் பாராட்டி வருவதோடு படவாய்ப்புக்களும் குவிந்து வருகின்றதாம். இதனால் இதுவரை 10 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அந்த வரிசையில் தற்போது இசைஞானி இளையராஜா விக்ரம் பட வெற்றிக்காக கமலை பாராட்டி உள்ளார்.இதற்கு, 'நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம்.

“என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல தொடர விழையும் உங்கள் நான்' என கமல் டுவிட் போட்டுள்ளார். இவர்களின் இந்த உரையாடலை பார்த்து, இவர்களுக்குள் இப்படி ஒரு சகோதர பாசமா என அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement