• May 12 2024

இரட்டை குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி- அவரே வெளியிட்ட பதிவு இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலரது குரலை மக்களால் மறக்கவே முடியாது.அப்படிபட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி.

ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.இவர் பாடிய எல்லா பாடல்களும் செம ஹிட், எத்தனை முறை இவரது பாடலை கேட்டாலும் சுகமாக இருக்கும்.

அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் அவர்.

சின்மயி 2013ம் ஆண்டு முதல் நடிகர் ராகுல் என்பவரை காதலித்து வந்தார். இதன் பின் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த நிலையில் இருவருக்கும் தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளார்கள். மேலும் அவர்களின் புகைப்படங்களுடன் குழந்தைகளின் பெயர்களோடு இந்த சந்தோஷ செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் சின்மயி.

இதோ அவர்களது அழகிய குழந்தைகளின் புகைப்படங்கள்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement