• May 13 2024

இயக்குநர் நெல்சனின் மகனை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குநராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.மேலும் இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குநராக அறிமுகமாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்று படத்தை இயக்கி இருந்தார்.மேலும் இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜே சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் இந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எனினும் இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இவ்வாறுஇருக்கையில் நெல்சன் இப்போது ரஜினியின் 169வது படத்தை இயக்க இருக்கின்றார், சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர தற்போது இயக்குநர் நெல்சன் தனது மகன் மற்றும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ மனைவி மற்றும் எடுத்த அந்த புகைப்படம்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement