• May 13 2024

நடிகை தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் பிரபல நடிகர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார்.

எனினும் அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கின்றார். அத்தோடு, கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பு கொடுத்தார்கள்.

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாக தெரிவித்து இருந்தார்கள்.

அத்தோடு , இவர்களின் பிரிவு குறித்து சமூகவலைத்தளத்தில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இவர்கள் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கு பின்னர் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவலால் சமூக வலைதளமே ரணகளப்பட்டு வருகின்றது. சமந்தாதாவும் அவருடைய பிஆர் டீம்மும்தான் இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டு வருவதாக நாக சைதன்யாவின் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அதற்கு சமந்தாவும் தக்க பதிலடி கொடுத்த வருகிறார். தெலுங்கு முதல் தேசிய ஊடகங்கள் வரை நாக சைதன்யா புதுக்காதல்தான் ஹாட் நியூஸாக உள்ளது. இந்நிலையில் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி சென்று வருவதாகவும் பல மணி நேரம் அவருடன் தங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement