• May 18 2024

பிரபாஸின் சலார் திரைப்படம் எப்பிடி இருக்கு- டுவிட்டர் விமர்சனம் இதோ

stella / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் சலார்.மகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இப்படம் குறித்து மக்கள் எப்படி தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்து வருகின்றார்கள் என்று பார்ப்போம்.

சலார் படத்தின் முதல் பாதி ரொம்பவே டீசன்ட்டா உள்ளது. நிறைய இடங்கள் புரியாத புதிராகவே உள்ளன. 2ம் பாதிக்காக வெயிட்டிங் சலார் ரொம்பவே வொர்ஸ்ட்டான திரைப்படம். ஒரே டார்க்கா இருக்கு.. ஸ்டோரிலைன் நல்லாவே இல்லை. அப்படியே கேஜிஎஃப் படம் பார்த்த மாதிரி சண்டைக் காட்சிகள், உக்ரம் படத்தையே ரீமேக் செய்து வைத்து விட்டு ரீ டெல் என பிரசாந்த் நீல் உருட்டி உள்ளார் என படத்தை வைத்து செய்துள்ளனர். 


சலார் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்து வருவது ஷாருக்கான் ரசிகர்கள் தான். பிரபாஸ் ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என பிரபாஸ் ரசிகர்கள் தொடர்ந்து படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர்.

சலார் படத்தின் முதல் பாகமே சகிக்கல என்றும் இதுல சவுர்யாங்க பர்வம் என 2வது பார்ட் வேற வரப் போகுதா.. போதும்டா சாமி என இந்த நெட்டிசன் பெரிய கும்பிடு போட்டுள்ளார்.இயக்குநர் பிரஷாந்த் நீலின் இயக்கம் சூப்பர். தி பெஸ்ட், பிரபாஸின் மாஸ் கம் பேக். சண்டை காட்சிகள் அனைத்துமே வெறித்தனமாக இருக்கிறது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்' என எக்ஸ் தளத்தில் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். 

ஒரு பக்கம் இப்படத்திற்கு நல்ல விமர்சங்கள் கிடைத்து வந்த நிலையில் மற்றொரு புறம் இப்படம் நன்றாக இல்லை, என கூறியும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. 




Advertisement

Advertisement