• May 20 2024

விக்ரம் படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்பட்டதா ? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து கமலின் படம் வெளியாவதால் ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்கள் வரை அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.விஜய் சேதுபதி ,பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பல இடங்களுக்கு கமல் ப்ரமோஷன் பணிகளுக்காக செல்கிறார்.கடந்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் கொரோனா சூழலையும் தாண்டி இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் அந்த விழாவில் விக்ரம் படத்தின் ட்ரைலரும் வெளியானது. ஆக்சன் திரில்லர் படமாக உருவான விக்ரம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு U A சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இதைதொடர்ந்து விக்ரம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தில் கிட்டத்தட்ட பத்து இடங்களில் சென்சார் கத்திரி வைத்துள்ளது. மேலும் சில முக்கிய இடங்களிலும் சென்சார் செய்யப்பட்டதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement