சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள திரைப்படம் தான் ‘தாய்க்கிழவி’. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா பணியாற்றியுள்ளார்.
வெளியான டிரெய்லரில் ராதிகா சரத்குமார் முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே அவரது கேரக்டர் லுக் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஒரு தாயுக்கும், அவரது மகன்களுக்கும் இடையிலான சொத்து பிரச்சினையே இப்படத்தின் மையக் கதையாக காணப்படுகிறது . இருப்பினும், ராதிகாவின் கதாபாத்திரம் குறித்து டிரெய்லரில் பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை.
இறுதியில், உடல்நலக் குறைவால் ராதிகா படுக்கையில் இருப்பதும், அவரின் சொத்துகள் யாருக்கு சேரும் என்பது தெரியாத மர்மமும் காட்டப்படுகிறது.
சிங்கம்புலி, முனீஸ்காந்த் மற்றும் பால சரவணனின் நகைச்சுவை காட்சிகள் படத்தில் நன்றாக கைகொடுக்கும் என டிரெய்லர் சுட்டிக்காட்டுகிறது. அனைத்து அரசியல் கட்சிப் பெயர்களும் இடம்பெறும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. ‘தாய்க்கிழவி’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Listen News!