பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுடர் மயிலைப் பார்த்து நைட் என்ர போனில இருந்து மாமாவுக்கு போன் எடுத்து கதைச்சியா என்று கேட்கிறார். அதுக்கு மயில் அவர் கதைக்கல என்கிறார். அதைக் கேட்ட சுடர் நான் வேணும் என்றால் கடைக்குப் போய் வீட்டு சூழ்நிலையை மாமாவுக்கு சொல்லவா என்று கேட்க, மயில் அதுக்கு வேணாம் என்கிறார். மறுபக்கம் கோமதி மீனாவைப் பார்த்து உங்க மாமா இப்ப சரியாவே சாப்பிடுறேல என்கிறார்.
அதைக் கேட்ட மீனா, நம்மள வேணாம் என்று நினைக்கிறவங்க சாப்பிடலனா என்ன என்கிறார். அதுக்கு கோமதி நீ என்னடி டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்திடுவ போல இருக்கே என்கிறார். பின் மீனா அப்படியெல்லாம் இல்ல அத்தை நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க என்கிறார். அதனை அடுத்து ராஜி தலையை விரித்துவிட்டு வந்து நிற்கிறதை பார்த்த கோமதி நீ ஏன் இப்படி இருக்கிற என்று கேட்கிறார்.

அதுக்கு கதிர் ராஜி ஸ்டைலா இருக்கா என்று சொல்லுறார். மேலும், நான் தான் இப்படி செய்ய சொன்னேன் என்கிறார் கதிர். அதைக் கேட்ட கோமதி மீனாவைப் பார்த்து இவ்வளவு சந்தோசமா இருக்கிறவங்களுக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைச்சேன் என்று என்னோட புருஷன் கோபப்படுறார் என்கிறார். அதனை அடுத்து, காந்திமதி பொம்பிளை வீட்டுக்காரரைப் பார்த்து குமாருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் தெரியுமா என்று கேட்கிறார்.
அதைக் கேட்டு பொம்பிளையோட அப்பா ஷாக் ஆகுறார். மேலும், காந்திமதி நான் தான் இந்த விஷயத்தை கோவிலில வைச்சு சொன்னேன் என்று யாருக்கும் சொல்லிடாதீங்க என்கிறார். அதனை அடுத்து மயில் வேலைக்குப் போன இடத்தில சமையல் வேலையையும் பார்க்கட்டுமா என்று கேட்கிறார். அதுக்கு ஓனர் சம்மதிக்கிறார். பின் மயிலும் சந்தோசப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!