• Apr 15 2026

ஜல்லிக்கட்டு புல்லுக்கட்டைனு உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க.. விஜ யை வெளுத்து வாங்கிய ஜூலி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், நேற்றைய தினம் வேலூரில் நடைபெற்ற மாநாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டை தமிழக அரசியலுடன் ஒப்பிட்டு பேசியதை விமர்சித்து பிக் பாஸ் ஜூலி ஒரு வீடியோ வெளியிட்டு விளாசியுள்ளார்.. அதில் அவர் கூறியதாவது,

'நான் இப்போதுதான் உங்களுடைய பரப்புரை பேச்சை பார்த்தேன். வழக்கம்போல அதுல ஒண்ணுமே இல்லன்னு பார்த்துக்கோங்க. ஜல்லிக்கட்டு காளை பற்றி நீங்க சொன்ன குட்டிக்கதை கேட்டதிலிருந்து அதுக்கு பதில் சொல்லாம இருக்க முடியல.

நீங்க பாட்டுக்கு போற போக்கில் ஒரு ஜல்லிக்கட்டு காளை இருந்துச்சு, அதுக்கு ஒரு குழந்தை புல்லுக்கட்டை கொடுத்துச்சுன்னு சொல்லிட்டு போயிருவீங்க. உங்க கட்சியில இருக்கிற பல பேர் மைனர். அவங்களும் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டை காட்டுறேன்னு சொல்லி ஒண்ணு கிடைக்க ஒண்ணு ஆகிட்டா என்ன செய்வது?


50 ஐம்பதாகவே இருக்கட்டும் அண்ணா… அதை 500 ஆக வேண்டாம். எல்லோரும் கஷ்டப்பட்டு ஜல்லிக்கட்டு உரிமை வாங்கி வைத்திருக்கோம். அது முறையாகவும் நடந்து வருது.

உங்க ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டை காட்டுறேன்னு சொல்லி ஏதாவது ஆகப்போகுது, திரும்பவும் போராடுற தெம்பு இல்லை. கொஞ்சம் பார்த்து, பக்குவமா பேசுங்க. உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு போயிடாதீங்க அண்ணா.' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'கேள்வி கேட்பது எதிர்ப்பு இல்லை. அது ஜனநாயக உரிமை. பிரபலமா இருப்பது ஒரு விஷயம்; வழிநடத்துவது இன்னொரு பெரிய பொறுப்பு' என்றும் அவர் தனது வீடியோவில் கேப்ஷன் போட்டுள்ளார்.

ஜூலியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement