• Jun 15 2026

பலரது கனவை அசால்ட்டாக நிறைவேற்றிய தொகுப்பாளினி DD..! இன்ஸ்டாவில் வைரலாகும் க்ளிக்ஸ்.!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரான திவ்யதர்ஷினி, ரசிகர்களிடையே அன்பாக “DD” என அழைக்கப்படுகின்றார். அதிகளவான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


அதில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் உலகக் கோப்பையை வென்ற வீரருமான ‘தல’ எம்.எஸ். தோனியுடன் DD எடுத்துக்கொண்ட புகைப்படம் இடம் பெற்றுள்ளது. திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் எடுத்த பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 


அவற்றில் ஒரு புகைப்படத்தில், இருவரும் புன்னகையுடன் கேமராவை நோக்கி போஸ் கொடுத்துள்ளனர். மற்றொரு படம், DD தோனியை சந்தித்த நிமிடத்தில் கொண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

DD-யின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் " ரெண்டுபேருமே கியூட்டா இருக்கீங்க..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்திருந்தனர். பலரும் “எனக்கும் ஒரு நாள் தோனியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” எனவும் பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த போட்டோஸ் வெளியான சில மணிநேரத்தில் அதிகளவான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement