• May 24 2025

ஹிந்தி நடிகர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்..!

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

ஹிந்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளில் பல முன்னணி படங்களில் நடித்த நடிகர் முகுல் தேவ் (வயது 54) இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. முகுல் தேவின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் விந்து தாரா சிங் முகுல் தேவின் மரணத்தை உறுதி செய்து எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். குறித்த பதிவில் “என் சகோதரர் முகுல் தேவ் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். உங்கள் நினைவுகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும். ‘சன் ஆப் சர்தார் 2’ படம் அனைவரையும் மகிழ்விக்கட்டும்.” என குறிப்பிடுள்ளார்.


மேலும் முகுல் தேவ் தனது பெற்றோரின் மரணத்திற்குப் பின் தனிமையைத் தேடியதாகவும் பிற்பாடு திரைத்துறையிலிருந்து விலகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது மரணம் ரசிகர்களையும் திரைத்துறையையும் பெரிதும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement