• Apr 01 2023

அடேய் ..பாவம்டா அவரு....7 வில்லன்கள இந்தியன் தாத்தா எப்படித்தான் சமாளிப்பாரோ தெரியல.!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் கமல் ஹாசன் அரசியலிலும், சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான விக்ரம் ஏகபோக வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். 

ஷங்கர் - கமல் காம்பினேஷனில் வெளியான இந்தியன் படத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. இந்தியன் தாத்தாவாக ஊழலுக்கு எதிராக ஒரு கலக்கு கலக்கியிருப்பார் கமல் ஹாசன். நிஜ வாழ்க்கையிலும் இப்படியொரு தாத்தா கண்டிப்பாக இந்திய நாட்டிற்கு தேவை என்று எண்ண தோன்றும் ஒரு கதாபாத்திரம்.

தற்போது மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் - கமல் காம்போவில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத், திருப்பதி என்று பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

தற்போது சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் ஹாசனுக்கு 7 வில்லன்களாம். அதுவும், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, ஜெயபிரகாஷ், சிவாஜி குருவாயூர் ஆகியோர் வில்லன்களாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தனுஷ்கோடியில் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement