• Mar 28 2023

வி.ஜே.பார்வதியை கலாய்த்த ஜி.பி.முத்து... இப்படித்தான் கூறினேன் காமெடி டாக்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

ஜி.பி.முத்து அவர்கள் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட நேரம் அவர் அடிக்கடி கூறும் 3 பிரசித்தி பெற்ற வசனங்களை கூற சொன்னார்கள்.


அப்போது அவர் நக்கு என்று கூறியதை பற்றி தெளிவாக சொல்லி இருந்தார். அவர் டிக் டாக் செய்து கொண்டு இருந்த நேரத்தில் ஒருவர் அவருக்கு அவரின் ஏதோ ஒரு வீடியோவிற்கு தவறாக கமெண்ட் பண்ணி இருந்தாராம், அந்த கோவத்தில் இவர் நக்கு என்று கூறி இருக்கிறார். 


இது மிகவும் பரவலாக மக்கள் மத்தியில் வெளி வந்து விட்டது. இதை சாண்டி மாஸ்டர் ஒரு பாடலிலும் இணைத்து விட்டார். நான் கோவத்தில் சொன்ன வார்த்தை இப்படி பிரபலமாகி விட்டது என்று கூறினார். மேலும் எப்போது இனி லெட்டர் படிப்பீர்கள் என்று கேட்டதற்கு அவர் "நான் ஊரிற்கு சென்று காட்டில் இருந்து படித்தால் தான் சுகமாக இருக்கும்" என்றார்.


நோர்த்தில் இருந்து உங்களை படம் நடிக்க கூப்பிடுறார்களாமே? என்று கேட்டதற்கு இவர் " தமிழிலே வாய்ப்பு வரவில்லை இதில் நோர்த் எங்க கூப்பிடப்போகுது, அப்படி கூப்பிட்டால் உன்னையும் கூட்டிக்கொண்டு போறேன் என்று பார்வதியை கலாய்த்தார் ஜி.பி.முத்து.


மேலும் குடிமகன் படம் மிகவும் எதார்த்தமான படம், அனைவரும் தியேட்டர் போய் பாருங்கள், அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று படத்தை பற்றியும் கூறி இருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement