• May 21 2024

'அவன் எனக்கு மாமனா மச்சானா'... விஷ்ணு, மாயாவிற்கு இடையில் வெடித்த மோதல்... பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு... ப்ரோமோ வீடியோ இதோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் கடந்த 7-ஆண்டுகளாகத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பல துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டு ஆட்டம், பாட்டத்துடன் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்தோடு சண்டை, சச்சரவுகளும் இடம்பெற தொடங்கி விட்டன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் விஷ்ணுவும், மாயாவும் ஒருவரைப் பற்றி ஒருவர் வாக்குவாதம் போல் பேசுகின்றனர். அந்தவகையில் விஷ்ணு "உங்களுக்கு எப்படி இத்தனை லட்ஷம் வியூவர்ஸ், இவங்க எப்பிடி கெத்தாக சொல்லுறாங்க என்று டவுட்" என மாயாவை பார்த்து சொல்கின்றார்.


மேலும் "பிரதீப் என்ற சக போட்டியாளரை அவரின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்காமல்.." என்று மாயாவை குத்திக் காட்டிப் பேச, பதிலுக்கு மாயா "அவன் யாரு எனக்கு மாமனா மச்சானா" எனக் கூறிக் கடுப்பாகின்றார். பின்னர் விஷ்ணுவிற்கும் பிரதீப்பிற்கும் இடையில் சிறிய ஒரு வாக்குவாதம் இடம்பெறுகின்றது.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement