நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உலகப்போர். இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது? இதன் முழு விமர்சனம் பாப்போம் வாங்க. ஹிப்ஹாப் ஆதி உலகப்போர் அளவுக்கு சிந்தித்து இந்த கதையை உருவாக்கி தான் மட்டுமே இதை சுமக்க வேண்டும் என்று இல்லாமல், படத்தின் செகண்ட் ஹீரோ போல் தான் வருகிறார். முதல் ஹீரோ நட்ராஜ் என்கிற நட்டி தான்.
இவர் தான் கதையே சொல்லி படத்தை தொடங்குகிறார், ஆரம்பத்தில் உலகம் எப்படி தோன்றியது என இவர் சொல்லும் கதையே நம்மை படத்திற்குள் கொண்டு வருகிறது. தான் ஒரு கிங் மேக்கர் என அவர் எடுக்கும் முட்டாள்தனமே படத்தின் கதையாக நீள்கிறது. இதில் நாசர், முனிஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் ஆதி-யின் அனைத்து படங்களில் வரும் அவர்கள் நண்பர்கள் என அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.
2028-ல் கதை தொடங்குகிறது, நட்டி தமிழக முதலமைச்சர் மச்சான் மற்றும் பினாமி, இவர் தான் இந்த ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல் ஒரு கிங் மேக்கர் ஆக இருக்கிறார். உலகமே தற்போது இரண்டாக பிரிந்துள்ளது. ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிய, இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது, இந்த நேரத்தில் முதலமைச்சர் மகள் ஆத்மிகா அறிமுகம் கிடைத்து அவரை காதலிக்கவும் தொடங்குகிறார்.
இந்த நிலையில் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்க, அதை வெளியே எடுக்க நட்ராஜ் ஒரு கலவரத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி செல்ல, ராணுவம் களம் இறங்கி தமிழகத்தை கைப்பற்றுகிறது. ஆதியை தீவிரவாதி லிஸ்டில் சேர்கின்றனர். இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க ஆரம்பிக்க, மொத்த சென்னையையும் அழிக்கின்றனர், அதன் பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
ஆனால், இத்தனை நல்ல கான்செப்ட் இருந்தும் பெரிதாக படத்தில் அழுத்தமான காட்சிகள் என்று இல்லை, இத்தகைய கதையில் கண்டிப்பாக ஒரு எமோஷ்னல் போராட்டம் இருக்க வேண்டும், அப்படியான போராட்டம் மிஸ்ஸிங், அதனாலேயே டைம் பாஸாக இதில் கூறிய பல நல்ல கருத்துக்களையும் மக்கள் கடந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் ஆதி தனது இசையமைப்பை சூப்பராக செய்துள்ளார்.
Listen News!