• Jan 18 2025

போதைக்கு அடிமையானவரா காமெடி நடிகர் செந்தில்... வைரல் தகவல் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் செந்தில்  ஒரு காலத்தில் உச்ச காமெடியனாக இருந்தவர். கவுண்டமணி செந்தில் கூட்டணியில் வந்த காமெடி காட்சிகள் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடும் நகைச்சுவையாக இருந்து வருகின்றன. இவர் போதை பழக்கத்துக்குவுள்ளாகி இருப்பதாக செய்திகள் பரவிவருகின்றனர். 


தற்போது 72 வயதாகும் செந்தில் அவ்வப்போது படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்த லால் சலாம் படத்தில் அவர் ஒரு ரோலில் நடித்திருந்தார். நடிகர் செந்தில் குடிப்பழத்திற்கு அடிமையாக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் பட விழாவில் போட்டு உடைத்திருக்கிறார். 


செந்தில் எப்போதும் அவுட்டோர் ஷூட்டிங் போக வேண்டும் என்று தான் விரும்புவார் அங்கு போனால் தான் குடிக்க முடியும். "ஒரு முறை அவுட்டோர் ஷூட்டிங் சென்றபோது இருவரது ஹோட்டல் அறையும் பக்கத்து பக்கத்தில் இருந்தது, அவரது அறையில் இருந்து சோகமான பாடல்கள் கேட்டதால் சென்று பார்த்தேன் அவர் அறையில் தரையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார் சைடு டிஷ் ஆக லிவர் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்."


"அதற்குப் பிறகு நான் என்னுடைய அறையை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்கு தள்ளி சென்று விட்டேன்" என ரஜினி மேடையில் கூறியிருக்கிறார் காமெடியனாக அறியப்பட்ட செந்தில் இவ்வளவு பெரிய குடிகாரரா என ரசிகர்கள் பெரிய அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement