• Sep 08 2024

இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்? ஓடிடி லிஸ்டும் இதோ.. ஆனா சுந்தர். சி படத்தில் ட்விஸ்ட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான கருடன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. இந்த படத்தில் நடிகர் சூரியுடன், சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி என பலர் நடித்திருந்தார்கள். தற்போது வரையில் இதன் வசூல் 26 கோடியை தாண்டி உள்ளது.

இந்த நிலையில், இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாக உள்ள படங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் நடிகர் மோகன் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்த ஹாரா  திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும். அடுத்ததாக நீட் தேர்வு, அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அஞ்சாமை திரைப்படம் 7ம் தேதி வெளியாகின்றது. இதில் விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் உருவான வெப்பன் படம் 7ம் தேதி வெளியாகின்றது. இதைத் தவிர புது முகங்கள் நடித்த எலிசாமி திரைப்படமும் அதே நாளில் வெளியாகும்.


ஓடிடியை பொருத்தவரையில் நான்கு படங்கள் வெளியாக உள்ளன. அதில் பரத், வாணி போஜன் நடித்த மிரள் திரைப்படத்தின்  தெலுங்கு டப்பிங் ஆஹா தளத்தில் வெளியாக உள்ளது.

அத்துடன் ஹன்சிகா நடித்த 105 மினிட்ஸ், யோகிபாபு நடித்த பூமர் அங்கிள் ஆகிய இரண்டு படங்களும் 7ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல தெலுங்கு படமான லவ் மீ  திரைப்படமும் ஏழாம் தேதி வெளியாக உள்ளது.

இதேவேளை சுந்தர். சி இயக்கிய அரண்மனை 4 படமும் இந்த வாரம் வெளியாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement