• Jan 19 2025

ரோகிணி முன் க்ரிஷை இழுத்து வீசிய விஜயா.. போட்டுக் கொடுத்த ரவி! முத்து சொன்ன சீக்ரெட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டுக்கு வந்த மீனா க்ரிஷின்  பாட்டியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, க்ரிஷ் அம்மா என்று அழைக்கிறார். இதன் போது மீனா பாவம் பிள்ளைக்கு அம்மா ஞாபகம் வந்துட்டு போல.. உங்க மகளுக்கு போன் போட்டு தாங்க  நான் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரோகினி பாலை கீழே கொட்டி விடுகிறார். இதனால் நான் பார்த்திருக்கிறேன் என மீனா அங்கு சென்று விடுகிறார். அந்த நேரத்தில் தான் ஸ்ருதியும் ரவியும் வீட்டுக்கு வருகின்றார்கள்.

இதன்போது ரூமுக்குள் சென்ற ரவி, ரோகினி அண்ணி வேணுமென்று தான் பாலை கீழே கொட்டினார். அவருக்கு அவங்க ரூம்ல இருக்கிறது பிடிக்கல போல. அதனால தான் இப்படி பண்றாங்க என்று சொல்ல, உடனே ஸ்ருதி அதனை ரோகினி இடம் கேட்கின்றார். ஆனாலும் அப்படி ஒன்றும் இல்லை என ரோகிணி சமாளித்து விடுகிறார்.

இதை தொடர்ந்து விஜயாவும் அண்ணாமலையும் வீட்டுக்கு வர அண்ணாமலை அவரது நண்பனை பார்க்க செல்ல, விஜயா உள்ளே வந்ததும் க்ரிஷ் அவரது கதிரையில் இருந்து ஆடுவதை பார்த்து கோபமடைகிறார். மேலும் ரோகிணிக்கு முன்னால் க்ரிஷை  கண்டபடி திட்டி சின்னப்பிள்ளை என்றும் பார்க்காமல் கதிரையிலிருந்து இழுத்து தள்ளி விடுகிறார். ரோகிணியின் அம்மா அங்கு வரவும் அவருக்கும் பேசுகிறார். அப்போது மீனா சின்ன பிள்ளைக்கு இப்படி பேசுறீங்க? இதுவே க்ரிஷ்ட அம்மா இருந்தா இப்படி பேசுறத  பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா என்று கேட்க, ரோகிணி எதுவும் பேச முடியாமல் இருக்கிறார்.


அதன் பிறகு கிச்சனில் வைத்து மீனாவிடம் முத்து ரோகிணிக்கு அம்மா ஆகணும் என்று ஆசை போல, சீக்கிரமே இந்த வீட்டுல குழந்தை சத்தம் கேட்கப்போகுது அதனாலதான் க்ரிஷ்ச விழுந்து விழுந்து கவனிக்கிறார் என்று சொல்ல, இதனை வெளியில் இருந்து ரோகிணி கேட்கிறார். மனோஜூம் கேட்டு விட்டு உனக்கு அப்படி ஆசை இருக்குதா என்று கேட்க, முதலில் பிசினஸை டெவலப் பண்ணு என்று சொல்லுகிறார்.

இறுதியாக கிரிஷை பாட்டி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல ரெடியாகிக் கொண்டிருக்க, ரோகிணி யாருக்கும் தெரியாமல் வந்து க்ரிஷ்க்கு விபூதி வைத்து விடுகிறார். இதன் போது ரோகிணி  தனது பையனுக்கு முத்தம் கொடுக்க, க்ரிஷும் ரோகினிக்கு முத்தம் கொடுக்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement