• Feb 05 2026

கார்த்தியின் அடுத்த படத்தின் வில்லன் யார் தெரியுமா?வெளியான தகவல் இதோ...!

Roshika / 5 months ago

Advertisement

Listen News!

தனது படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கார்த்தி, தற்போது மூன்று புதிய திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், கார்த்தி தற்போது ‘வா வாத்தியார்’ மற்றும் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.


இதையடுத்து, ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழின் இயக்கத்தில் கார்த்தியின் 29வது படமாக உருவாகும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘மார்ஷல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.


‘மார்ஷல்’ படம் கடல் பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் கதையுடன் கூடிய இரட்டை பாகத் தொடராக உருவாகவுள்ளது. கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் முதலில் வில்லன் கதாபாத்திரத்திற்கு நிவின் பாலி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார். இதன் பின்னர் அந்த முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி பினிஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் தொடர்பான மேலதிக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement